ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் 4,500 பணி இடங்கள்
|ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் (எஸ்.எஸ்.சி) மூலம் மத்திய அரசு அலுவலகங்களில் கிளார்க், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்டரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 4,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1-1-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2-1-1995 அன்றைய தேதிக்கு முன்பாகவோ, 1-1-2004 அன்றைய தேதிக்கு பின்பாகவோ பிறந்திருக்கக்கூடாது.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, டைப்பிங் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 4-1-2023. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான நடைமுறைகளை https://ssc.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.