< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
சோனி எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 900 ஸ்பீக்கர்
|2 Feb 2023 9:31 PM IST
சோனி நிறுவனம் வயர்லெஸ் ஸ்பீக்கரை எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 900 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்ந்து 25 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.69,900. இதில் இனிய இசையை வழங்க 6 டுவீட்டர்கள் உள்ளன. இதை டி.வி.யுடன் இணைக்கலாம்.
இதில் உள்ள பூஸ்டர் சிஸ்டம் ஒலியின் அளவை அதிகரித்துத் தரும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 மணி நேரம் செயல்படும். 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 3 மணி நேரம் வரை செயலாற்றும் வகையில் சக்தி வாய்ந்த பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடனும் இதை இணைத்து பாடல்களைக் கேட்டு மகிழ முடியும்.