< Back
சிறப்புக் கட்டுரைகள்
சோனி ஹெச்.டி. எஸ் 400 சவுண்ட் பார்
சிறப்புக் கட்டுரைகள்

சோனி ஹெச்.டி. எஸ் 400 சவுண்ட் பார்

தினத்தந்தி
|
2 Sept 2022 7:09 PM IST

சோனி நிறுவனம் புதிதாக வயர்லெஸ் சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது. ஹெச்.டி. எஸ் 400 என்ற பெயரில் இது வெளி வந்துள்ளது.

இது திரையரங்கில் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும். 330 வாட் திறன் கொண்டது. இத்துடன் வயர்லெஸ் சப் ஊபரும் உள்ளது. இதுவும் சிறப்பான இசை வெளிப்பட உதவுகிறது. இதனால் டிஜிட்டல் இசை அனுபவத்தை உணர முடியும்.

ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்டது. இது தவிர இதிலேயே ஒலி அளவை அதிகரிக்க பிரத்யேக பொத்தான்களும் உள்ளன. பிராவியா டி.வி.யை இயக்குவதன் மூலம் இதுவும் வயர் இணைப்பின்றி தானாக ஆன் ஆகி செயல்படும்.

இதில் உள்ள ஒலெட் டிஸ்பிளேயில் ஒலி அளவு உள்ளிட்ட விவரங்களைப் பார்க்க முடியும். புளூடூத் 5.0 இணைப்பு வசதி, சுவரில் மாட்டும் வசதி, இரவு நேரத்திற்கேற்ப ஒலி அளவைக் குறைக்கும் வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாட்டிலும் இது செயல்படும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.21,990.

மேலும் செய்திகள்