< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
சோனி பிராவியா எக்ஸ்.ஆர். எக்ஸ் 95 கே
|25 Aug 2022 9:21 PM IST
சோனி நிறுவனம் புதிதாக பிராவியா சீரிஸில் எக்ஸ்.ஆர். எக்ஸ் 95 கே என்ற பெயரில் 85 அங்குல எல்.இ.டி. டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
இதில் சோனி நிறுவனத்தின் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட காக்னிடிவ் பிராசஸர் உள்ளது. இது கோடிக் கணக்கான வண்ணங்களை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டது. இதனால் காட்சிகள் அதன் உண்மை நிறம் மாறாமல் இதில் தெரியும்.
இதில் 16 ஜி.பி. நினைவகம் உள்ளது. ஆண்ட்ராய்டு டி.வி. மற்றும் கூகுள் டி.வி. இயங்குதளம் கொண்டது. புளூடூத் 4.2 இணைப்பு வசதி கொண்டது. 60 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர் மற்றும் சப் ஊபர்களைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.8,99,900.