< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
சோனி பிராவியா எக்ஸ்.ஆர். சீரிஸ் ஸ்மார்ட் டி.வி
|16 Jun 2022 8:55 PM IST
சோனி தயாரிப்புகளில் பிராவியா டி.வி. மிகவும் பிரபலம். இதில் தற்போது எக்ஸ்.ஆர். சீரிஸ் வெளியாகியுள்ளது.
இதில் அடுத்த தலைமுறை பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. எல்.இ.டி. பேனல், ட்ரிலுமினோஸ் புரோ, கான்ட்ராஸ்ட் பூஸ்டர் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.
இதில் மோஷன் கிளாரிடி தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. 4-கே ரெசல்யூஷனில் காட்சிகள் துல்லியமாகத் தெரியும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் செயல்படும். பொதுவாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் கொண்ட டி.வி.க்களில் கலர், கான்டிராஸ்ட் உள்ளிட்டவற்றை மட்டுமே அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இதில் உள்ள புதிய காக்னிடிவ் பிராசஸர் நுட்பமானது பல்வேறு விஷயங்களை ஒரே முறையில் ஆய்வு செய்து, மனித மூளை எதை விரும்புகிறது என்பதை கணித்து அதற்கேற்ப காட்சிகளில், வெளிச்சம், வண்ண அளவு உள்ளிட்டவற்றை நிர்ணயித்துவிடும்.