< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
சோனி பிராவியா எக்ஸ்.ஆர்
|5 Aug 2022 6:15 PM IST
சோனி நிறுவனம் பிராவியா மாடலில் எக்ஸ்.ஆர். சீரிஸில் புதிய டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.
இவை 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட ஓலெட் டி.வி.யாகும். இதில் காக்னிடிவ் பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இது 4-கே ரெசல்யூஷனைக் கொண்டிருப்பதால் வீடியோ கேம்களையும் விளையாட முடியும். டால்பி விஷன், டால்பி அட்மோஸ் உள்ளது. இது 55 அங்குலம், 65 அங்குலம், 75 அங்குல அளவுகளில் வந்துள்ளது. இது 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் டி.வி. இயங்குதளம் உள்ளது. குரல் வழி கட்டுப்பாட்டில் செயல்படக் கூடியது. உள்ளீடாக குரோம்காஸ்ட் உள்ளது. 65 அங்குல மாடல் விலை சுமார் ரூ.2,65,990. 77 அங்குல மாடல் விலை சுமார் ரூ.5,50,990.