< Back
சிறப்புக் கட்டுரைகள்
கடுங்குளிரையும் தாங்கும் சூரிய வெப்பக்கூடாரம்
சிறப்புக் கட்டுரைகள்

கடுங்குளிரையும் தாங்கும் சூரிய வெப்பக்கூடாரம்

தினத்தந்தி
|
25 Sept 2022 2:39 PM IST

ராணுவ வீரர்களுக்காக கடுங்குளிரையும் தாங்கும் சூரிய வெப்பக்கூடாரத்தை பொறியாளரும், கல்வியாளருமான சோனம் வடிவமைத்துள்ளார்.

சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள பகுதிகள் கடும் குளிர் நிலவக்கூடியவை. பனிப்பொழிவுகளும் நிகழக்கூடியவை. கடும் குளிருக்கும், பனிகளுக்கும் மத்தியில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக கடுங்குளிரையும் தாங்கும் சூரிய வெப்பக்கூடாரத்தை பொறியாளரும், கல்வியாளருமான சோனம் வடிவமைத்துள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலின்போது நம் வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதோடு, அவர்கள் தங்கியிருந்த இடம் கடும் குளிர் பிரதேசம் என்பதால், அந்த சீதோஷ்ண நிலையையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் நம் ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த சம்பவம்தான், சோனத்தை யோசிக்க வைத்தது.

போரில் உயிரிழப்பை தடுக்க முடியாது. ஆனால், இயற்கை சூழல் நம் ராணுவ வீரர்களை கொன்றுவிடக்கூடாது என்ற நோக்கில், வித்தியாசமான ஆராய்ச்சியில் இறங்கினார். அதுதான் சூரிய வெப்பக்கூடாரம். இது குளிர்தேசங்களில், காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்காக உருவானது.

இந்தக் கூடாரத்தில் 10 வீரர்கள் தங்கலாம். எங்கு சென்றாலும் இந்தக் கூடாரத்தையும் மடித்து எடுத்துச் செல்லலாம். இதன் எடை 30 கிலோ கிராம்.

இந்த கூடார வடிவமைப்பு குறித்து சோனம் கூறுகையில், "மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் முதல் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைத் தாங்கக்கூடிய வகையில் இந்த சூரிய வெப்பக் கூடாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கடும் குளிர் தேசங்களில் கூட, இதனை பயன்படுத்தி சுலபமாக தங்கலாம். இதன் மூலம் குளிரை தடுக்க, மண்ணெண் ணெய் விளக்கு ஏற்றும் வழக்கமும், குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டும் வழக்கமும், முற்றிலுமாக தடுக்கப்படும். கூடவே, உள்ளூர் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இதன்மூலம் கார்பன் வெளியேற்றமும் தடுக்கப்படும்" என்கிறார்.

மேலும் செய்திகள்