ஸ்கோடோ குஷாக் அனிவர்சரி எடிஷன்
|செக்கோஸ்லோவோகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனத் தயாரிப்புகளில் குஷாக் மாடல் கார் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகும். இம்மாடலில் தற்போது அனிவர்சரி எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.15.59 லட்சம். இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.19.09 லட்சம். ஆரம்ப நிலை மாடல் 1 லிட்டர் என்ஜினைக் கொண்டது. பிரீமியம் மாடல் 1.5 லிட்டர் என்ஜினைக் கொண்டது. நடுத்தர ரக எஸ்.யு.வி. பிரிவில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்ற மாடலாக இது திகழ்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இம்மாடல் அறிமுகம் செய்யப் பட்டதிலிருந்து இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத் தொடர்ந்தே சில மேம்பட்ட அம்சங்கள், செயல்பாடுகளைப் புகுத்தி சிறப்பு எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 10 அங்குல தொடு திரை உள்ளது. பிரீமியம் மாடல் இரட்டை வண்ணங் களில் வெளிவந்துள்ளது. திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, 17 அங்குல அலாய் சக்கரம் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். ஒரு லிட்டர் என்ஜின் உள்ள மாடல் 115 ஹெச்.பி. திறனையும், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப் படுத்தும். இது 6 கியர்களைக் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் என்ஜின் உள்ள மாடல் 150 ஹெச்.பி. திறனையும், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.
இதில் 7 ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி உள்ளது. பயணிகள் பாதுகாப்புக்கென 6 ஏர் பேக்குகள் உள்ளன. இத்துடன் இ.எஸ்.சி., மழை உணர் வைபர், தானியங்கி கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.