மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டி.வி
|முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யை சென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை சுமார் ரூ.9,999. ஏற்கனவே இந்நிறுவனம் ஸ்மார்ட் கடிகாரம், வயர்லெஸ் இயர்போன் மற்றும் நெக்பேண்ட் உள்ளிட்டவற்றை இந்தியாவில் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. தற்போது டி.வி.யை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் நிறுவனத்தின் நொய்டா ஆலையில் தயாராகின்றன.
இவை 43 அங்குலம் முதல் 65 அங்குல அளவுகளில் கிடைக்கின்றன. மிகப் பிரபலமான டாவின்சி மற்றும் பிகாசோ ஆகிய பெயரில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவிலான டி.வி.க்கள் டாவின்சி என்றழைக்கப்படுகின்றன. இதில் குவாட் கோர் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. கூகுள் டி.வி.யாக இது அறிமுகமாகியுள்ளது. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூ-டியூப் ஆகியன உள்ளன.
20 வாட் ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ் இசையுடன் வந்துள்ளது. 50 அங்குலம் மற்றும் 55 அங்குல அளவிலான டி.வி.க்கள் பிகாசோ என்றழைக்கப் படுகின்றன. 32 அங்குலம் மற்றும் 43 அங்குல டி.வி.க்கள் சென்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ளன. 50 அங்குல டி.வி. விலை சுமார் ரூ.24,999, 55 அங்குல டி.வி. சுமார் ரூ.29,999.