< Back
சிறப்புக் கட்டுரைகள்
கதையின் நாயகியாக சாய் பல்லவி
சிறப்புக் கட்டுரைகள்

கதையின் நாயகியாக சாய் பல்லவி

தினத்தந்தி
|
12 Jun 2022 6:43 PM IST

நிவின்பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார் சாய் பல்லவி.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் சாய்பல்லவி. இவர் தமிழில் 2005-ம் ஆண்டு வெளியான 'கஸ்தூாி மான்' என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். 2008-ம் ஆண்டு வெளியான 'தாம்தூம்' படத்திலும் சிறிய கதாபாத்திரம் ஏற்றிருந்தார். மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார்.

இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அவருக்கு படங்கள் குவிந்தன. தமிழில் 'தியா', 'மாரி-2', 'என்.ஜி.கே.' போன்ற படங்களில் நடித்தார். தமிழை விடவும் தெலுங்கில் அவருக்கு மார்க்கெட் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'விராட பருவம்' என்ற தெலுங்கு படம் வருகிற 17-ந் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்