ருத்ரா - தி எட்ஜே் ஆப் டார்க்னெஸ்
|டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்திய தொடர். பிபிசி-யின் ‘லூத்தர்’ஆங்கில தொடரை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் மம்சங்கர் இந்திய ரசிகர்களின் ரசனைக்கு தகுந்தபடி கதையெழுதி இயக்கியுள்ளார். நகரில் தொடர்ச்சியாக பெண் கொலைகள் பல நடக்கின்றன. குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகிறார்கள். இதனால் சஸ்பெண்டு செய்யப்பட்ட உயர் போலீஸ் அதிகாரி ருத்ராவிடம் அந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. அதனை அவர் துப்பு துலக்கினாரா? யார் அந்த தொடர் கொலைகளை செய்யும் கொலையாளி என்பதை பரபரக்கும் திரைக்கதையில் சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.
போலீஸ் கமிஷனர் ருத்ரா கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் வருகிறார். அலட்டல் இல்லாத நடிப்பால் கதையை தூக்கிப் பிடிக்கிறார். கொலையாளிகளில் ஒருவராக ராஷி கன்னா நடித்துள்ளார். இவர்களுக்கு இடையே நடக்கும் ஆடு-புலியாட்டம் தனியாக தெரிகிறது. ஹாலிவுட் தரத்திலான காட்சியமைப்பு, அடுத்தடுத்து நகரும் திரைக்கதை, சஸ்பென்சை கூட்டும் இசை ஆகியவை இந்ததொடரின் பிளஸ் எனலாம். அதுல் குல்கர்னி, இஷா தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். 6 எபிசோடுகள் வெளியாகியுள்ளன.