ரெனால்ட் கார்களின் லிமிடெட் எடிஷன்
|கார் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ரெனால்ட் நிறுவனம் தனது பிரபலமான கிவிட், டிரைபர் மற்றும் கிகெர் மாடலில் லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிகெர் மற்றும் டிரைபர் மாடலில் ஆர்.எக்ஸ்.இஸட். வேரியன்ட் களில் லிமிடெட் எடிஷன் அறிமுகமாகியுள்ளது. கிவிட் மாடல் வெள்ளை நிறத்தில் கருப்பு நிற மேற்கூரை என இரட்டை வண்ணம் கொண்டதாக வந்துள்ளது. முன்புற கிரில், பகலில் ஒளிரும் விளக்கு, முகப்பு விளக்கு மற்றும் கதவின் பக்கவாட்டுப் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்கிட் பிளேட்டுகள் முன்புறமும், பின்புறமும் சிவப்பு வண்ணத்தில் வந்துள்ளன. ரூப் ரெயில்ஸ்களும் மாற்றம் செய்யப்பட்டு கிவிட் கிளைம்பர் என்ற பெயரில் வந்துள்ளது.
கிகெர் மாடலில் சக்கரங்கள் சில்வர் நிறம் கொண்டதாகவும், பிரேக்குகள் சிவப்பு நிறத்திலும் உள்ளன. டிரைபர் மாடல் பியானோ கருப்பு நிறத்தில் வந்துள்ளது. லிமிடெட் எடிஷனாக இவை விழாக்காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்படுவதால் விலையில் மாற்றமின்றி விற்பனைக்கு வருகிறது.