< Back
சிறப்புக் கட்டுரைகள்
புதிய அம்சங்களுடன் ரெனால்ட் கிகர், டிரைபர், கிவிட்
சிறப்புக் கட்டுரைகள்

புதிய அம்சங்களுடன் ரெனால்ட் கிகர், டிரைபர், கிவிட்

தினத்தந்தி
|
16 Feb 2023 2:47 PM IST

ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் தனது கிகர், டிரைபர் மற்றும் கிவிட் ஆகிய மாடல் கார்களில் மேம்பட்ட அம்சங்களைப் புகுத்தி அறிமுகம் செய்கிறது.

இவை அனைத்துமே பாரத்-6 புகைவிதி இரண்டாம் கட்ட விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளன. இவை அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண் டவை. இதன்படி அனைத்து மாடல் களிலும் சுயபரிசோதனை கருவி சேர்க்கப்பட்டுள்ளது. இக்கருவியானது கார்கள் வெளியிடும் புகையின் அளவை தொடர்ந்து கண்காணிக்கும். இதற்கேற்ப இதில் கேட்டலிட்டிக் கன்வெர்டர் மற்றும் ஆக்சிஜன் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி (இ.எஸ்.பி.), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (ஹெச்.எஸ்.ஏ)., டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (டி.சி.எஸ்.), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டி.பி.எம்.எஸ்.) உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதில் உள்ள டி.சி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வாகனம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகளை பெருமளவு குறைக்க உதவும். அதேபோல டயர்களின் காற்றழுத்தத்தைக் கண்காணிக்க டி.பி.எம்.எஸ். உதவும். கிவிட் மாடலில் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டதாக ஆர்.எக்ஸ்.இ. வேரியன்ட் உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.4.69 லட்சம்.

இதில் டர்ன் இன்டிகேட்டர் மற்றும் ஓ.வி.ஆர்.எம். வசதி, ஸ்டீயரிங்கி லேயே ஆடியோ மற்றும் போன் கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த புதிய மாடல்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்