பிரிட்ஜின் நட்சத்திர மதிப்பீடு
|மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று உணவு. அந்த உணவை பாதுகாப்பது பிரிட்ஜ். அந்த பிரிட்ஜ் தரமானதாக இருக்க விடும். அவற்றின் தரத்தை தீர்மானிப்பது தான் நட்சத்திர மதிப்பேடு. நட்சத்திர மதிப்பீடு என்றால் என்ன? ஏன் நட்சத்திர மதிப்பீடு பெற்ற பிரிட்ஜை வாங்க வேண்டும்? என்பதை பற்றி பாப்போம்.
பிரிட்ஜ் இல்லாத வீடுகள் இல்லை என்றால் அது மிகை இல்லை. வீட்டில் இருக்கும் அனைத்து மின்சார கருவிகளிலும் மிக அதிகமாக மின்சாரத்தை செலவழிக்கும் கருவி பிரிட்ஜ் ஆகும். காரணம் 24 மணி நேரமும் அது ஆன் செய்யப்பட்டு இருப்பதால். நட்சத்திர மதிப்பீடு என்பது பிரிட்ஜ் செலவழிக்கும் மின்சாரத்தின் அளவை பொறுத்து வழங்கப்படுவதாகும். இந்த நட்சத்திர மதிப்பீடு எண் அதிகமாக இருந்தால், இந்தியாவில் அதிகமான நட்சத்திர மதிப்பீடு 5 ஆகும், அந்த பிரிட்ஜ் மிக குறைந்த மின்சாரத்தை செலவழிகிறது என்று பொருள். அதிக நட்சத்திர மதிப்பீடு பெற்ற பிரிட்ஜ் வாங்குவதால் பெரும் அளவு மின்சார செலவை குறைக்கலாம்.
எதற்காக இந்த ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்படுகிறது என்றால் இந்திய அரசாங்கம் மே 2006 ஆம் ஆண்டு அதிகமான திறன் கொண்ட மின்சாரக் கருவிகளின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்காக பியூரோ ஆப் எனர்ஜி எபிஷியன்ஸி என்ற அமைப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த பிஇஇ பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான நட்சத்திர ரேட்டிங் திட்டத்தை அமல்படுத்தியது. தரமான பிரிட்ஜ்களுக்கு அதன் திறனுக்கு ஏற்ப 1 -5 வரை எண் கொண்ட நட்சத்திரங்கள் வழங்கப்பட்டது. நட்சத்திர எண் அதிகம் கொண்ட பிரிட்ஜ் என்றால் அது மிகவும் தரமான பிரிட்ஜ் என்று பொருள்படும். அந்த நட்சத்திர எண்ணிக்கையை பிரிட்ஜில் பதிக்க வேண்டும் என்ற விதி 2010 இல் இருந்து கட்டாயமாக ஆக்கப்பட்டது.
பிரிட்ஜ்களை லிட்டரின் அளவைக் கொண்டு பிரிப்பார்கள். உதாரணமாக 200 - 300 லிட்டர் பிரிட்ஜ் என்பது போல. முன்னமே சொன்னது போல் 5 ஸ்டார்கள் கொண்ட பிரிட்ஜ் என்றால் அவை மிக குறைந்த அளவு மின்சாரத்தை செலவழிக்கும் என்று பொருள். மேலும் அவை தரமான இன்வெர்ட்டர் கம்ப்ரஸர்களைக் கொண்டிருக்கும் மற்றும் வெளியில் இருந்து வெப்பம் பிரிட்ஜுக்குள் நுழையா வண்ணம் பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கும். இதனால் பிரிட்ஜ் மின்சாரத்தை குறைவாக செலவழிக்கும். மின் கட்டண செலவு குறைக்கப்படும்.
நட்சத்திர குறியீடு பெற்ற பிரிட்ஜ்களின் விலை கூடுதலாக தான் இருக்கும். 5 நட்சத்திர தரமான பிரிட்ஜ் வீட்டில் இருப்பதால் நாம் அடையும் நன்மை ஏராளம். உணவு பொருட்களை பாதுகாத்து, உடல் நலத்தை பாதுகாக்கும்; மின்சார கட்டணம் மிகப்பெரிய அளவில் குறைக்கப்படும்; பழுதாகாமல் பல வருடங்கள் இயங்கும்; இவற்றையெல்லாம் நாம் கணக்கில் கொண்டு பார்க்கும் போது அதற்காக கொடுக்கும் கூடுதல் விலை ஒன்றும் பெரிய தொகையாக இருக்காது.