< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ரெட்மி ஸ்மார்ட் பயர் டி.வி.
|23 March 2023 6:45 PM IST
ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி ஸ்மார்ட் டி.வி.யை தற்போது அறிமுகம் செய்துள்ளது. பயர் டி.வி. என்ற பெயரில் 32 அங்குல அளவில் இது கிடைக்கும்.
இதில் அமேசானின் பயர் இயங்குதளம் உள்ளது. இதனால் அலெக்சா குரல் வழிக் கட்டுப்பாடு மூலம் இதை செயல்படுத்தலாம். பயர் டி.வி.யிலிருந்து 12 ஆயிரத்துக்கும் மேலான பொழுதுபோக்கு செயலிகளை பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்டது.
இது தவிர உள்ளீடாக பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லிவ், யூடியூப் உள்ளிட்ட சேனல்களையும் பார்க்க முடியும். அமேசான் மினி டி.வி. மற்றும் 70 க்கும் மேற்பட்ட சேனல்களையும் ஸ்ட்ரீமிங் மூலம் பார்க்கலாம். 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம் கொண்டது. வை-பை, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.13,999.