< Back
சிறப்புக் கட்டுரைகள்
ரெட்மி நோட் 12 புரோ
சிறப்புக் கட்டுரைகள்

ரெட்மி நோட் 12 புரோ

தினத்தந்தி
|
19 Jan 2023 3:35 PM IST

ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி நிறுவனம் நோட் 12 புரோ என்ற பெயரிலான புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன் நோட் புரோ 12 பிளஸ் என்ற மாடலும் அறிமுகமாகியுள்ளது. இதில் 6.67 அங்குல அமோலெட் திரை உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.24,999.

இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உடையது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

புரோ பிளஸ் மாடலில் 200 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நோட் 12 புரோ பிளஸ் மாடல் விலை சுமார் ரூ.29,999.

மேலும் செய்திகள்