< Back
சிறப்புக் கட்டுரைகள்
ரெட் மி ஏ 1 பிளஸ் ஸ்மார்ட்போன்
சிறப்புக் கட்டுரைகள்

ரெட் மி ஏ 1 பிளஸ் ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
27 Oct 2022 6:16 PM IST

ரெட்மி நிறுவனம் புதிதாக ஏ 1 பிளஸ் என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.52 அங்குல ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டது. இதில் 2 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் ஹீலியோ ஏ 22 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இதன் பின்பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

இதில் 2 ஜி.பி. மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதை 512 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு உதவியோடு விரி வாக்கம் செய்யலாம். இதில் ஆண்ட்ராய்டு 12 கோ இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.7,499.

நீலம், கருப்பு மற்றும் இளம் பச்சை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.8,499.

மேலும் செய்திகள்