< Back
சிறப்புக் கட்டுரைகள்
ரெட்மி 10 ஏ ஸ்போர்ட்
சிறப்புக் கட்டுரைகள்

ரெட்மி 10 ஏ ஸ்போர்ட்

தினத்தந்தி
|
5 Aug 2022 6:05 PM IST

ரெட்மி நிறுவனம் புதிதாக 10 ஏ ஸ்போர்ட் என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.53 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரை கொண்டது. இதில் ஹீலியோ ஜி 25 பிராசஸர், நீண்ட நேரம் செயல்பட 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 10 வாட் திறன் கொண்ட சார்ஜர் உள்ளது.

இதன் பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

இது 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. கருப்பு, கிரே, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.10,999. இதன் எடை 194 கிராம்.

மேலும் செய்திகள்