< Back
சிறப்புக் கட்டுரைகள்
டெக்லைப் ஆர் 100 ஸ்மார்ட் கடிகாரம்
சிறப்புக் கட்டுரைகள்

டெக்லைப் ஆர் 100 ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
7 July 2022 9:06 PM IST

ரியல்மி நிறுவனம் புதிதாக டெக்லைப் ஆர் 100 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதில் உள்ளீடாக மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை கேட்க முடிவதோடு நீங்கள் இதன் மூலம் பதிலும் அளிக்க முடியும்.

அமேசான் அலெக்ஸா குரல் வழி கட்டுப்பாட்டிலும் செயல்படக்கூடியது. 1.23 அங்குல வட்ட வடிவிலான திரையைக் கொண்டது. புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது. ஓட்டம், நடை, கிரிக்கெட், நீச்சல், யோகா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயிற்சிகளில் நீங்கள் ஈடுபடும்போது உங்களின் உடலியக்க செயல்பாடுகளை இது துல்லியமாக பதிவு செய்யும். இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவிடுவது, தூக்க குறைபாடுகளை பதிவு செய்வது உள்ளிட்டவற்றை இது துல்லியமாக செய்யும். ஸ்மார்ட்போனில் இசையைக் கேட்கும் போது அதன் ஒலி அளவைக் கட்டுப்படுத்துவது, புகைப்படம் எடுக்கும்போது கேமரா செயல் பாடுகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளையும் இதன் மூலமே மேற்கொள்ள முடியும்.

அலாரம், ஸ்டாப்வாட்ச், பிளாஷ் லைட் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. இதன் எடை 46 கிராம். இதில் 380 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. இது 7 நாள்கள் வரை செயல்பட உதவுகிறது. இதன் விலை சுமார் ரூ.3,999.

மேலும் செய்திகள்