< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ரியல்மி 10 புரோ பிளஸ்
|27 Nov 2022 9:02 PM IST
ரியல்மி நிறுவனமும் 5 -ஜி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை 10 புரோ பிளஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இது 6.7 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் ஓலெட் திரையைக் கொண்டுள்ளது. இருபுறமும் வளைவான தன்மை கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகாபிக்ஸெல் கேமராவும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.19,445.