< Back
சிறப்புக் கட்டுரைகள்
ரியல்மி 10 புரோ
சிறப்புக் கட்டுரைகள்

ரியல்மி 10 புரோ

தினத்தந்தி
|
20 Dec 2022 2:21 PM GMT

ரியல்மி நிறுவனம் 10 புரோ என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.72 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென் சிடி பிராசஸர் உள்ளது. 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. நினைவகத் திறனை 1 டி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின் புறம் 108 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்க வாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

தங்க நிறம், நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.18,999. இதில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.19,999.

மேலும் செய்திகள்