< Back
சிறப்புக் கட்டுரைகள்
ரியல்மி 10 புரோ கோகோ கோலா லிமிடெட் எடிஷன்
சிறப்புக் கட்டுரைகள்

ரியல்மி 10 புரோ கோகோ கோலா லிமிடெட் எடிஷன்

தினத்தந்தி
|
23 Feb 2023 3:26 PM IST

ரியல்மி நிறுவனம் 10 புரோ மாடலில் கோகோ கோலா லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கோகோ கோலா சிறப்பம்சங்களான கருப்பு-சிவப்பு கலவை மற்றும் பாட்டில் வடிவம் பின்பகுதியில் இடம்பெற்றுள்ளது. கோகோ கோலா நிற சிவப்பு மிகுந்த நம்பிக்கை தரும் வண்ணமாக இருப்பதால் அது இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனத்தின் பிரத்யேக லோகோ, கீறல் விழாத தன்மை மற்றும் விரல் ரேகை பதிவாவதை தடுக்கும் வகையிலான நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவாக சார்ஜ் ஆகும் வசதி, பிரத்யேக ரிங்டோன், கோக் பபுள் டோன், கோகோ கோலா கேமரா பில்டர் ஆகியன இதன் பிரத்யேக அம்சங்களாகும். கேமரா ஷட்டர் இசையானது பாட்டிலை திறக்கும்போது ஏற்படும் ஓசையைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 6.72 அங்குல திரையைக் கொண்டுள்ளது.

ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும், பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சாரும் கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.20,999.

மேலும் செய்திகள்