< Back
சிறப்புக் கட்டுரைகள்
ரெயில் என்ஜின் தொழில்நுட்பங்கள்
சிறப்புக் கட்டுரைகள்

ரெயில் என்ஜின் தொழில்நுட்பங்கள்

தினத்தந்தி
|
15 Sept 2022 9:47 PM IST

டீசல் எரிபொருளில் இயங்குகிற உந்துப்பொறிக்கு டீசல் எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் என்றும், வாகனங்களில் இருப்பதைப் போல் டீசல் என்ஜின் ஒன்று அதற்குள் இருக்கும். அதுதான் டீசலில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்யும்.

நாம் பொதுவாக கியர்கள் என்று அழைக்கும், வாகனங்களில் உள்ள விசையூடி இணைப்புகள் ெரயில்களுக்கும் உண்டா? என கேட்கலாம். இதுதொடர்பாக ரெயில்வே துறையை சேர்ந்த பொறியியல் வல்லுனர் ஒருவர் கூறும் போது, ரெயிலின் முதல் பெட்டிக்குப் பெயர் நாம் அழைப்பதைப் போல என்ஜின் கிடையாது. என்ஜின் என்று அதைச் சொல்வது ஒட்டுமொத்த வீட்டையும் சமையலறை என்று சொல்வதைப் போன்றது. அதன் பெயர் லோகோமோட்டிவ். வாகனங்களில் பெட்ரோல் வாகனம், டீசல் வாகனம் என்றிருப்பதைப் போல், உந்துப்பொறியுடைய ஆற்றல் மூலத்தை வைத்து அதற்குப் பெயர் உண்டு. டீசல் எரிபொருளில் இயங்குகிற உந்துப்பொறிக்கு டீசல் எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் என்றும், வாகனங்களில் இருப்பதைப் போல் டீசல் என்ஜின் ஒன்று அதற்குள் இருக்கும். அதுதான் டீசலில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்யும்.

தண்டவாளத்துக்கு மேலே செல்லும் மின்கம்பிகளில் இருந்து நேரடியாக மின் ஆற்றலைப் பெறும் மற்றொரு வகை எலக்ட்ரிக் லோகோமோட்டிவ். இன்னும் சில வகைகள் புழக்கத்தில் இருந்தாலும் அவை பெரும்பாலும் அழகுக்காகவும், சுற்றுலாப் பயன்பாடுகளுக்காகவுமே இயக்கப்படுகின்றன. ரெயில் போக்குவரத்தை ஆள்பவை மேற்சொன்ன இரண்டும்தான்.

இந்த டீசல்-மின் உந்துப்பொறியில் நம் வாகனங்கள் போல் டிரான்ஸ்மிஷன் கிடையாது. கியர்பாக்ஸ் என்பது கிட்டத்தட்ட என்ஜின் அளவுக்குப் பெரிதாக இருப்பதை நம் இருசக்கர வாகனங்களிலேயே கவனித்திருக்கலாம். ெரயில் என்ஜின்களின் அளவைப் பார்க்கும்போது அவை பூதாகரமாக இருக்க வேண்டும்; அதையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நகர்வது கூடுதல் சுமை. டீசல் உந்துப்பொறிகள் சிலவற்றில் தொடக்கக் கட்டத்தில் இவை புழக்கத்தில் இருந்தாலும், இப்போது கிட்டத்தட்ட இல்லை. பல்வேறு தொழில்நுட்பங்கள் ரெயில் என்ஜின் பயன்பாட்டில் வந்துவிட்டன" என்று கூறினார்.

மேலும் செய்திகள்