< Back
சிறப்புக் கட்டுரைகள்
போர்ட்ரானிக்ஸ் நெக்பேண்ட் இயர்போன்
சிறப்புக் கட்டுரைகள்

போர்ட்ரானிக்ஸ் நெக்பேண்ட் இயர்போன்

தினத்தந்தி
|
15 Sept 2022 7:06 PM IST

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் நெக்பேண்ட் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஹார்மோனிக்ஸ் இஸட் 2 என்ற பெயரில் வந்துள்ள இந்த நெக்பேண்டின் விலை சுமார் ரூ.1,999. இதில் 250 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளதால் இது தொடர்ந்து 30 மணி நேரம் செயல்படும்.

இதில் டென்ஸில் சிலிகான் நெக்பேண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நெகிழ்வுத் தன்மை மற்றும் உறுதித் தன்மை வாய்ந்தது. இது புளூடூத் 5.2 இணைப்பு கொண்டது. குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இதை செயல் படுத்தலாம். நீலம், கருப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் வந்துள்ளது.

மேலும் செய்திகள்