< Back
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
லேப்டாப் ஸ்டாண்ட்
|24 March 2023 8:30 PM IST
மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் சவுகரியமாக லேப்டாப்பைக் கையாளும் வகையில் எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான லேப்டாப் ஸ்டாண்டை மை பட்டி கே 6 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
360 டிகிரி சுழலும் வகையிலான அடிப்பகுதியைக் கொண்டது. தேவையான கோணத்தில், உயரத்தில் இதை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். லேப்டாப்பை எளிதில் கையாளும் வகையில் ஸ்டாண்டாக பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப் பட்டது. இது உறுதியான உலோகத்தால் (அலுமினியம் அலாய் மற்றும் கார்பன் ஸ்டீல்) ஆனது.
லேப்டாப் சூடேறுவதைக் குறைக்கும் வகையில் பின்புறம் காற்றோட்ட வசதி கொண்டது. டேபிளி லிருந்து 15.6 அங்குல உயரம் வரை இதை உயர்த்திக்கொள்ள முடியும். லேப்டாப்பை கச்சிதமாக பிடித்துக்கொள்ளும் வகையிலான குஷன் அமைப்பு கொண்டது. சில்வர் நிறத்தில் வந்துள்ள இந்த ஸ்டாண்டு விலை சுமார் ரூ.3,999.