< Back
சிறப்புக் கட்டுரைகள்
டி.டபிள்யூ.எஸ். பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்
சிறப்புக் கட்டுரைகள்

டி.டபிள்யூ.எஸ். பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்

தினத்தந்தி
|
14 July 2022 3:15 PM GMT

ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் டி.டபிள்யூ.எஸ். பூம்பாக்ஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.

போர்ட்ரானிக்ஸ் டேஷ் 12 என்ற பெயரில் இது வந்துள்ளது. இது வயர்லெஸ் ஸ்பீக்கராகும். 60 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர் தொடர்ந்து 9 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.7,799.

இது புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. இதில் பல நிறங்களில் ஒளியை வெளியிடும் எல்.இ.டி. விளக்குகள் உள்ளன. ஸ்பீக்கரிலிருந்து வெளியாகும் இசை டியூனுக்கேற்றபடி வண்ணமயமாய் மாறும்.

மைக்ரோபோன் வசதி உள்ளதால் நீங்கள் பாடி கேட்டு மகிழலாம். யு.எஸ்.பி. மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட அடிப்படையில் பாடல்களைக் கேட்கலாம். குரல் வழி கட்டுப்பாட்டில் செயல்படும் திறன் கொண்டது.

இதனால் நீங்கள் கைகளால் இதை இயக்கத் தேவையில்லை. குரல் வழி உத்தரவுகளை இது ஏற்று செயல்படும். யு.எஸ்.பி. டைப் சி போர்ட் மூலம் இதை சார்ஜ் செய்ய முடியும்.

மேலும் செய்திகள்