ஓப்போ என் 2 மடக்கும் ஸ்மார்ட்போன்
|ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஓப்போ நிறுவனம் என் 2 என்ற பெயரில் மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது 6.8 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. முன்பகுதியில் 3.2 அங்குல திரை உள்ளது.
இதில் ஸ்மார்ட்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். போனை திறந்து பதில் அளிக்காமல் குரல்வழி மூலம் பதில் அளிப்பது போன்ற வசதிகளைக் கொண்டது. விரல் ரேகை மற்றும் கீறல் விழாத திரையைக் கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவையும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவையும் கொண்டது.
இதில் 3.2 கிகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஓ.எஸ். 13 இயங்குதளம் உடையது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. 4,300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 44 வாட் சூப்பர்வூக் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.89,999.