< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ஓப்போ ஏ 77 ஸ்மார்ட்போன்
|18 Aug 2022 8:05 PM IST
ஓப்போ நிறுவனம் புதிதாக ஏ 77 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 6.56 அங்குல எல்.சி.டி. ஹெச்.டி. பிளஸ் திரை உள்ளது. இதன் பின்புறம் 2 கேமராக்கள் 50 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவையாக உள்ளன. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர் உள்ளது.
இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 33 வாட் சார்ஜருடன் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியை உடையதாக இது வந்துள்ளது. புளூடூத் இணைப்பு வசதி, இரட்டை பேண்ட் வை-பை இணைப்பு வசதி, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உடையது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம், இரண்டு ஸ்பீக்கர்களைக் கொண்டது. ஆரஞ்சு, நீல வண்ணங் களில் இது கிடைக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.15,499.