< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஓப்போ ஏ 17 கே ஸ்மார்ட்போன்
சிறப்புக் கட்டுரைகள்

ஓப்போ ஏ 17 கே ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
27 Oct 2022 11:59 AM GMT

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஓப்போ நிறுவனம் புதிதாக ஏ 17 கே என்ற பெயரிலான புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் 2.3 கிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர் உள்ளது. இது 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. இதை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்துகொள்ள முடியும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீடித்து செயல்படும் விதமாக இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. நீலம், தங்கம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையக விலை சுமார் ரூ.10,499.

மேலும் செய்திகள்