ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்
|பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன் பிளஸ் 11 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது 5-ஜி தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடியது. 6.7 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. 8-வது தலைமுறை ஸ்நாப்டிராகன் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்தும்போது சூடேறுவதைக் குறைக்கும் வகையில் இதில் கிறிஸ்டலைன்-கிராபீன் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் செயல்படும் ஆக்சிஜன் இயங்குதளம் 13 பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி 100 வாட் சூப்பர்வூக் சார்ஜருடன் வந்துள்ளது. இதனால் 50 சதவீதம் 10 நிமிடத்தில் சார்ஜ் ஆகிவிடும். முழுமையாக சார்ஜ் ஆக 25 நிமிடம் போதுமானது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. கருப்பு, பச்சை வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.56,999.