< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஒன் பிளஸ் 10 டி ஸ்மார்ட்போன்
சிறப்புக் கட்டுரைகள்

ஒன் பிளஸ் 10 டி ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
18 Aug 2022 8:34 PM IST

பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் தற்போது 10 டி மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.7 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் 3.2 கிகா ஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8 பிளஸ் பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது.இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மற்றும் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம் ஒருங்கே உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு இயங்குதளத்தை அப்டேட் செய்யும் வசதியை யும் இந்நிறுவனம் அளிக்கிறது. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறம் செல்பி பிரியர்களுக்கென 16 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது.

இதில் 4,800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 160 வாட் சூப்பர்வூக் அடாப்டர் உள்ளது. இதனால் 19 நிமிடங்களில் இது முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம், 12 ஜி.பி. மற்றும் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டதாக மாடல்கள் வந்துள்ளன. 8 ஜி.பி. ரேம் மாடல் விலை சுமார் ரூ.49,999. 12 ஜி.பி. மாடல் விலை சுமார் ரூ.54,999. 16 ஜி.பி. மாடல் விலை சுமார் ரூ.55,999.

மேலும் செய்திகள்