< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
உலகில் பலர் உடல் பருமன் உள்ளவர்கள்...
|16 Sept 2022 8:09 PM IST
உலக மக்கள் தொகையில் 76 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு (overfat) அதிகம் என்று கூறுகிறது ஒரு புதிய ஆய்வு.
நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் என பலர் இந்த ஆய்வில் பங்கெடுத்து இம்முடிவை கூறுகின்றனர்.
தேவையைவிட உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பினால் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாவதையே 'ஓவர் பேட்' என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 'இந்த ஓவர்பேட் பாதிப்பு சாதாரண எடை கொண்டவர்களுக்கும் இருக்கிறது. சாதாரண எடை கொண்டவர்கள் கூட அதிக வயிற்று கொழுப்பு காரணமாக நீண்டகால நோய்களினால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்' என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
உலகில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் மக்களுக்கு கொழுப்பு குறைவாக (underfat) இருக்கிறது என்றும், உலகில் 14 சதவிகிதம் மக்கள்தான் சரியான உடல் கொழுப்புடன் இருக்கின்றனர் என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.