< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
நோக்கியா எக்ஸ் 30 ஸ்மார்ட்போன்
|7 March 2023 6:05 PM IST
நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக எக்ஸ் 30 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 6.43 அங்குல அளவிலான அமோலெட் திரை, ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 695 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.48,999.
இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.