< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
நோக்கியா மடக்கும் போன்
|8 Sept 2022 7:43 PM IST
நோக்கியா போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக மடக்கும் விதமான செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா 2660 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இதன் விலை சுமார் ரூ.4,699. மைக், இயர்போன் ஆகியவை வெகு அருகில் அமைவதால் பேசுவது மற்றும் கேட்பது மிகவும் எளிதாக உள்ளது. 2.8 அங்குல திரை, 48 எம்.பி. ரேம், 128 எம்.பி. நினைவகம் கொண்டது.
இதை மைக்ரோ எஸ்.டி. கார்டு போடுவதன் மூலம் 32 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்ய இயலும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புற கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வசதி கொண்டது. 1450 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியுடன் உள்ளது. 20 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. கருப்பு, சிவப்பு நிறத்தில் இது அறிமுகமாகியுள்ளது.