< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
நெர்வ் புரோ நெக்பேண்ட்
|7 July 2022 8:01 PM IST
நாய்ஸ் நிறுவனம் புதிதாக நெர்வ் புரோ என்ற பெயரிலான நெக் பேண்டை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 35 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. இயர்பட் முனைப் பகுதி சிலிக்கான் ஜெல்லால் ஆனது. 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 10 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. சுற்றுப்புற இரைச்சலை தவிர்க்கும் நுட்பம் கொண்டது.
புளூடூத் 5.0 இணைப்பு வசதி, நீர், வியர்வை புகாத தன்மை கொண்டது. உபயோகத்தில் இல்லாத சமயத்தில் இரண்டு இயர் போன்களும் ஒட்டிக் கொள்ளும் வகையில் காந்த சக்தி கொண்டவை. குரல் வழி கட்டுப்பாட்டிலும் இதை செயல்படுத்தலாம். நீலம், கருப்பு, பச்சை உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த நெக் பேண்டின் விலை சுமார் ரூ.899.