< Back
சிறப்புக் கட்டுரைகள்
நிசான் எக்ஸ் டிரெய்ல்
சிறப்புக் கட்டுரைகள்

நிசான் எக்ஸ் டிரெய்ல்

தினத்தந்தி
|
3 Nov 2022 8:05 PM IST

சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் எஸ்.யு.வி. மாடலான எக்ஸ் டிரெய்ல் மாடல் காரை இந்தியாவில் நிசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாடலில் முதலாவது மற்றும் இரண்டாம் தலைமுறை மாடலை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பல காரணங்களால் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது எக்ஸ் டிரெய்ல் மாடலில் நான்காம் தலைமுறை மாடல் காரை அறிமுகம் செய்வதில் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது.

இது 5 பேர் மற்றும் 7 பேர் பயணிக்கும் வகையிலான வடிவமைப்பு களைக் கொண்டது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் குறைவான திறன் கொண்ட ஹைபிரிட் மாடலாகும். 2 சக்கர சுழற்சி மற்றும் 4 சக்கர சுழற்சி கொண்ட மாடல்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். தொடக்கத்தில் முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மாடலை இறக்குமதி செய்து விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்