< Back
சிறப்புக் கட்டுரைகள்
வெளிநாட்டு மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்கள் எவை..? ஆய்வில் தகவல்!
சிறப்புக் கட்டுரைகள்

வெளிநாட்டு மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்கள் எவை..? ஆய்வில் தகவல்!

தினத்தந்தி
|
29 Jun 2022 3:00 PM GMT

சர்வதேச மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்களாக மும்பை மற்றும் பெங்களூரு மாநகரங்கள் திகழ்கின்றன.

மும்பை,

உலகம் முழுவதும் பல நாடுகளிலும், பிற வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், "கியூ.எஸ்(QS)" உலக பல்கலைக்கழக தரவரிசை என்பது குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் பல்கலைக்கழக தரவரிசைகளின் வருடாந்திர வெளியீடு ஆகும். அந்த வகையில், கியூ.எஸ் மாணவர்களுக்கான 'சிறந்த நகரங்களின் தரவரிசை' இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி, சர்வதேச மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்களாக மும்பை மற்றும் பெங்களூரு மாநகரங்கள் திகழ்கின்றன.

சர்வதேச தரவரிசையில் 103-வது இடத்தில் உள்ள மும்பை, மலிவு விலை தங்குவதன் பிரிவில் அதிக மதிப்பெண் பெறுகிறது.

சர்வதேச மாணவர்களுக்கான முதல் 140 நகரங்களின் பட்டியலில் மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன குறிப்பிடத்தக்கது.

இந்திய நகரங்களை பொறுத்தவரை மும்பை முதலிடத்திலும், அதனை தொடர்ந்து பெங்களூரு 114-வது இடத்திலும், சென்னை (125) மற்றும் டெல்லி (129) உள்ளன. இந்த ஆண்டு சென்னை மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநகரங்களும் புதிதாக இடம்பிடித்துள்ளன.


வெளிநாட்டு மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்கள் எவை..? ஆய்வில் தகவல்இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாணவர் அமைப்பில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே சர்வதேச மாணவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வின்படி, இந்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 47,427 மட்டுமே.

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 லட்சம் சர்வதேச மாணவர்களை ஈர்க்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இது இந்தியாவில் தற்போதைய வெளிநாட்டு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

மலிவு விலை, வாழ்க்கைத் தரம், பல்கலைக்கழகத்தின் தரம் மற்றும் அந்த இடத்தில் படித்த முந்தைய மாணவர்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேவையான தகவலை 'கியூ.எஸ்' சிறந்த நகரங்களின் தரவரிசை வழங்குகிறது.

உலக அரங்கில் சர்வதேச மாணவர்கள் அதிகம் விரும்பும் நகரங்கள் தரவரிசையில் லண்டன் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் நீடிக்கிறது.

அதைத் தொடர்ந்து தென்கொரிய தலைநகரான சியோல் உள்ளது. மேலும், ஆசிய நகரங்களில் சியோல் முதலிடத்திலும், டோக்கியோ, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் ஒசாகா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் தொடர்ந்து உள்ளன.

மேலும் செய்திகள்