மி.வி. போர்ட் சவுண்ட்பார்
|ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் மி.வி. நிறுவனம் போர்ட் எஸ் 16 மற்றும் போர்ட் எஸ் 24 என்ற பெயரிலான இரண்டு சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது.
இதில் எஸ் 16 மாடல் 16 வாட் திறன் கொண்டது. அதேபோல எஸ் 24 மாடல் 24 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்களைக் கொண்டது. இதை டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றுடன் இணைத்து செயல்படுத்தலாம். எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான வடி வமைப்பைக் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
புளூடூத் இணைப்பு வசதி மற்றும் ஏ.யு.எக்ஸ்., யு.எஸ்.பி. மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதி கொண்டது. திரையரங்குகளில் பாடல்களைக் கேட்பதைப் போன்ற அனுபவத்தை இது தரும். இதில் 2 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. எஸ் 24 மாடலில் 2,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது.
இதனால் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் தொடர்ந்து 6 மணி நேரம் இயங்கும். வயர்லெஸ் மூலமும் செயல்படும். போர்ட் எஸ் 16 மாடல் விலை சுமார் ரூ.1,299 ஆகவும், போர்ட் எஸ் 24 மாடல் விலை சுமார் ரூ.1,799 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.