< Back
சிறப்புக் கட்டுரைகள்
சர்பேஸ் லேப்டாப் கோ 2
சிறப்புக் கட்டுரைகள்

சர்பேஸ் லேப்டாப் கோ 2

தினத்தந்தி
|
16 Jun 2022 6:13 PM IST

சாப்ட்வேர் உருவாக்கத்தில் முன்னணியில் திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டாம் தலைமுறை லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. சர்பேஸ் லேப்டாப் கோ 2 என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது.

12.4 அங்குல திரை மற்றும் விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. இதில் 11-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 5 பிராசஸர் உள்ளது. இதில் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம், விண்டோஸ் 11 இயங்குதளம் உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 13 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது. வை-பை 6, யு.எஸ்.பி. ஏ, யு.எஸ்.பி. சி, ஹெட்போன் இணைப்பு வசதிகளைக் கொண்டது. 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.46,565. இதில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.54,325.

மேலும் செய்திகள்