எம்.ஜி. ஹெக்டார் புதிய தலைமுறை கார்
|எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் மாடலில் புதிய தலைமுறை மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதில் பல தானியங்கி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஓட்டுவதில் மேம்பட்ட அம்சங்களை அளிக்கும் வகையில் இதில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. 7 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மாடலில் 11 விதமான மேம்பட்ட டிரைவர் உதவி வசதிகள் (ஏ.டி.ஏ.எஸ்.) உள்ளன. வாகன நெரிசல் உதவி (டி.ஜி.ஏ.), தானாக இண்டிகேட்டர் ஆன்-ஆப் ஆகும் வசதி உள்பட (டி.ஜி.ஏ.) உள்பட பல வசதிகள் உள்ளன. குறைந்த செயல்பாட்டில் அதிகபட்ச வசதிகளை அளிக்கும் விதமாக இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள டிரைவர் உதவி வசதிகள் வாகனம் ஓட்டு வதில் உள்ள சிரமங்களை பெருமளவு தவிர்த்து நிம்மதியாக வாகனம் ஓட்ட வழிவகுக்கிறது. அத்துடன் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்வதாக உள்ளது. இதன் உள்புறம் 14 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்ட சாவி மற்றும் சாவியை மற்றவருக்குப் பகிரும் வசதி கொண்டதாக இது உள்ளது. சாவி தொலைந்து போனால் இந்த டிஜிட்டல் சாவியின் உதவியோடு காரை ஆப் செய்யவோ அல்லது ஆன் செய்யவோ முடியும். மேலும் கார் ஓட்டுவதில் 75 விதமான கூடுதல் வசதிகள் உள்ளன.
குரல் வழி கட்டுப்பாடு மூலம் 100 விதமான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். இதற்கு ஐ-ஸ்மார்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. திறந்து மூடும் வகையிலான மேற்கூரை அமைப்பு, பார்க் பிளஸ் செயலி, ஜியோ சாவ்ன் செயலி உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.
ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இணைப்பு கொண்டது. 360 டிகிரி சுழலும் கேமரா, டிராக்ஷன் கண்ட் ரோல் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி, அனைத்து இருக்கை களுக்கும் சீட் பெல்ட் வசதி, பிரத்யேக பார்க்கிங் பிரேக், முன்புற பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன.