< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஐடி ஊழியர்களின் வேலை-க்கு வேட்டு வைக்க வரும் டெவின் தங்கச்சி தேவிகா
சிறப்புக் கட்டுரைகள்

ஐடி ஊழியர்களின் வேலை-க்கு வேட்டு வைக்க வரும் 'டெவின் தங்கச்சி தேவிகா'

தினத்தந்தி
|
5 April 2024 1:34 PM IST

உலகம் முழுவதும் தற்போது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) புயல் வீசி வருகிறது.

டெல்லி,

உலகம் முழுவதும் தற்போது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) புயல் வீசி வருகிறது. எங்கு பார்த்தாலும், எங்கு கேட்டாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏஐ குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி என்ற சாட்பாட்-ஐ அறிமுகம் செய்தது. அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு ஜெனரேடிவ் வகை செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது.

டெவின்:

சில வாரங்களுக்கு முன்னர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஏஐ மென்பொருள் இன்ஜினியரை காக்னிஷன் என்ற நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் பெயர் டெவின்.

கோட்களை எளிதில் எழுதும் வகையிலும் இன்ஜினியரிங் டாஸ்க்குகளை மனிதர்களுக்கு நிகராக புரிந்து கொண்டு செயல்படுத்தும் வகையிலும் இந்த ஏஐ-ஐ காக்னிஷன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தேவிகா:

டெவினுக்கு போட்டியாக இந்தியாவை சேர்ந்த ஒரு பொறியாளர் தேவிகா என்ற செயற்கை நுண்ணறிவு பொறியாளரை உருவாக்கியிருக்கிறார் . டெவினுக்கு போட்டியாக கேரளாவை சேர்ந்த 21 வயதான முபீஃத் என்பவர், தேவிகா என்ற ஏஐ (AI) மென்பொறியாளரை உருவாக்கியிருக்கிறார்.

மென்பொருள் துறையில் பொதுவாக கோடிங் (Coding) என்பது மிகவும் அடிப்படையான ஒன்று . அந்த வகையில் மனிதர்களுக்கு நிகராக தேவிகா ஏஐ (AI) கோடிங்கை எழுதுகிறது. தற்போது தேவிகா ஏஐ குறித்து தான் இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது டெவின் போல இல்லாமல் இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி பயன் பெறலாம் மற்றும் இதனை யார் வேண்டுமானாலும் மேம்படுத்தவும் முடியும். தேவிகா ஏஐ பொறியாளரை பயன்படுத்தி கோடிங் எழுதுவது மட்டுமின்றி நாம் எழுதிய கோடிங் புரோக்ராம்களையும் சரிப்பார்க்க முடியும்.

கோடிங் புரோகிராம்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் தேவிகா தானாகவே அதை திருத்தவும் செய்யும். எனவே தற்போது தேவிகா ஏஐ மீதான எதிர்பார்ப்பு என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த துறையில் ஆர்வம் இருப்பவர்கள் இது ஒரு ஓபன் சோர்ஸ் அடிப்படையிலான தொழில்நுட்பம் என்பதால் தன்னுடன் இணைந்து இதனை மேம்படுத்துவதற்கு உதவி செய்யலாம் என இதனை உருவாக்கிய முஃபீத் அழைப்பு விடுத்துள்ளார்.

விரைவில் ஒரு கட்டளையை புரிந்து கொள்வது, ஆராய்ச்சி செய்வது கோடினை எழுதுவது, ஆவணத்தை உருவாக்குவது மேலும் பயனாளரின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் ஒரு ப்ராஜெக்டை முடித்து கொடுப்பது ஆகிய பணிகளை தேவிகா ஏஐ எளிதாக செய்கிறது.

கோடிங் புரோகிராம்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் தேவிகா தானாகவே அதை திருத்தவும் செய்யும். எனவே தற்போது தேவிகா ஏஐ மீதான எதிர்பார்ப்பு என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த துறையில் ஆர்வம் இருப்பவர்கள் இது ஒரு ஓபன் சோர்ஸ் அடிப்படையிலான தொழில்நுட்பம் என்பதால் தன்னுடன் இணைந்து இதனை மேம்படுத்துவதற்கு உதவி செய்யலாம் என இதனை உருவாக்கிய முஃபீத் அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் ஒரு கட்டளையை புரிந்து கொள்வது, ஆராய்ச்சி செய்வது கோடினை எழுதுவது, ஆவணத்தை உருவாக்குவது மேலும் பயனாளரின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் ஒரு ப்ராஜெக்டை முடித்து கொடுப்பது ஆகிய பணிகளை தேவிகா ஏஐ எளிதாக செய்கிறது.

ஐடி ஊழியர்களின் வேலை-க்கு வேட்டா?

கோடிங் எழுதுதல், நாம் எழுதிய கோடிங் புரோக்ராம்களையும் சரிப்பார்த்தல், கோடிங் புரோகிராம்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை திருத்தம் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை தேவிகா ஏஐ பார்ப்பதால் இது போன்ற ஏஐ தொழில்நுட்பங்கள் ஐ.டி. ஊழியர்களின் வேலைக்கு வேட்டுவைக்கும் சூழ்நிலையை உருவாக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்