கே சீரிஸ் என்ஜினில் மாருதி எஸ் பிரஸ்ஸோ
|மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளில் எஸ் பிரஸ்ஸோ மாடல் காரில் தற்போது கே சீரிஸ் என்ஜின் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 1 லிட்டர் டியூயல் ஜெட், டியூயல் வி.வி.டி. என்ஜின் உள்ளது. இது எரிபொருள் சிக்கனமானது. சோதனை ஓட்டத்தில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 25.30 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. இதில் இ.எஸ்.பி., ஹில் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் ரியர் வியூ மிரர் உள்ளன. மாருதி நிறுவனம் எஸ் பிரஸ்ஸோ மாடல் அறிமுகம் செய்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேலான கார்கள் விற்பனையாகியுள்ளன.
இது 49 கிலோவாட் அவர் சக்தியை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இரண்டு ஏர் பேக் கொண்டது. ஏ.பி.எஸ்., இ.பி.டி., சீட் பெல்ட் உணர்த்தும் வசதி, அதிவேக எச்சரிக்கை வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இது தவிர எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி வசதி, ஹில்ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் பிரீமியம் மாடலில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை சுமார் ரூ.4.25 லட்சத்திலிருந்து ஆரம்பமாகிறது.