மாருதி சுஸுகி டிஸயர் டூர் எஸ் அறிமுகம்
|இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் தனது டிஸயர் மாடலில் மேம்பட்ட ரகத்தை டூர் எஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.6.51 லட்சம். இந்த மாடலில் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. வேரியன்ட்கள் மட்டுமே கிடைக்கும். இதில் சி.என்.ஜி. மாடல் காரின் விலை சுமார் ரூ.7.36 லட்சம். இது மூன்றாம் தலைமுறை டிஸயர் மாடலாகும்.
இதில் பாதுகாப்பு அம்சமாக முன்புறம் 2 ஏர் பேக்குகள் உள்ளன. சோதனை ஓட்டத்தில் ஒரு கிலோ சி.என்.ஜி.க்கு 32.1 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளை, கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் இது கிடைக்கும். ஸ்டீல் சக்கரம், கருப்பு நிற கைப்பிடி, கண்ணாடி உறை உள்ளிட்ட பிரத்யேக அம்சங்களைக் கொண்டது. இதன் பின்புற விளக்குகளும் எல்.இ.டி.யால் ஆனது. கார் வேகமாக செல்லும்போது தானியங்கி அடிப்படையில் கதவுகள் மூடிக்கொள்ளும் வசதி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி பிரேக், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது.
இது 1.2 லிட்டர் கே சீரிஸ் என்ஜினைக் கொண்டது. இது 90 ஹெச்.பி. திறனையும் 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தக் கூடியது. பெட்ரோல் வாகனம் சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 23.1 கி.மீ தூரம் ஓடியுள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் 20 சதவீதம் எரிபொருள் சிக்கனமானது.