< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
மாருதி சுஸுகி பிரீஸ்ஸா சி.என்.ஜி.
|22 Dec 2022 2:59 PM IST
இந்தியாவில் கார் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஸ்.யு.வி. மாடலில் பிரீஸ்ஸா மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் சுற்றுச் சூழலை பாதிக்காத சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்.யு.வி. கார்களில் தொழிற்சாலையிலேயே சி.என்.ஜி. சாதனங்கள் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் முதலாவது மாடல் இதுவாகும்.
இதில் 6 வேரியன்ட்கள் உள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் பிரீஸ்ஸா மாடலை 2016-ல் அறிமுகம் செய்தபோது டீசலில் இயங்கும் மாடலாக அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டில் பெட்ரோல் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இது 1.5 லிட்டர் கே 15 சி டியூயல் ஜெட் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 87 ஹெச்.பி. திறனை வெளிப் படுத்தக் கூடியது. சி.என்.ஜி. மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.11.72 லட்சம் முதல் சுமார் ரூ.14.55 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.