< Back
சிறப்புக் கட்டுரைகள்
மாருதி சுஸுகி ஆல்டோ கே 10
சிறப்புக் கட்டுரைகள்

மாருதி சுஸுகி ஆல்டோ கே 10

தினத்தந்தி
|
11 Aug 2022 3:36 PM GMT

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களைத் தயாரிப் பதில் முதலிடத்திலும், கார் சந்தையில் பெருமளவையும் தன்னகத்தே வைத்துள்ள மாருதி சுஸுகி நிறுவனம் புதிதாக ஆல்டோ மாடலில் கே 10 என்ஜின் கொண்ட ஸ்போர்ட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு லிட்டர் என்ஜின் உடையதாக 6 கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. முகப்பு விளக்கு மற்றும் பம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் பின்புறம் செலரியோ மாடலைப் போன்று உள்ளது. உள்புற டேஷ் போர்டிலும் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. ஜன்னல் கண்ணாடிகளை இயக்கும் வசதி டேஷ் போர்டில் உள்ளது.

ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஏ.பி.எஸ். ஆகிய வசதி களோடு பாதுகாப்பான பயணத்துக்கு 2 ஏர்பேக்குகளைக் கொண்டதாக வந்துள்ளது.

இதில் தற்போது மொத்தம் 12 வேரியன்ட்கள் உள்ளன. இதில் 8 மேனுவல் கியர்களைக் கொண்டதாகவும், 4 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டதாகவும் வந்துள்ளது. இது 69 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும்.

மேலும் செய்திகள்