மாருதி சுஸுகி ஆல்டோ கே 10 சி.என்.ஜி.
|இந்தியாவில் கார் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில் லாத கார் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தனது அனைத்து தயாரிப்புகளிலும் சி.என்.ஜி. மாடலை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது நிறுவனத் தயாரிப்பில் அதிகம் விற்பனையாகும் ஆல்டோ மாடலிலும் சி.என்.ஜி.யில் ஓடும் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.5.95 லட்சம்.
இது எரிபொருள் சிக்கனமானது. சோதனை ஓட்டத்தில் ஒரு கிலோ சி.என்.ஜி.க்கு 33.85 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. இது பெட்ரோல் மாடல் வாகனத்தை விட சுமார் ரூ.95 ஆயிரம் விலை அதிகமாகும். இதில் 1 லிட்டர் கே 10 சி என்ஜின், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இது 57 ஹெச்.பி. திறனையும் 82 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தும். உள்புறம் புளூடூத் இணைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் பிளே ஆடியோ சிஸ்டம், ஏ.யு.எக்ஸ்., யு.எஸ்.பி. போர்ட் வசதி கொண்டது.
வேக உணர் மற்றும் தானியங்கி கதவு பூட்டும் வசதி, பாதிப்பு உணர் கதவுகள், எந்த கியரில் வாகனம் செல்கிறது என்பதை உணர்த்தும் இன்டிகேட்டர்கள், முன்புறம் இரண்டு ஏர் பேக் வசதிகளுடன் வந்துள்ளது. அத்துடன் ஏ.பி.எஸ்., இ.பி.டி., ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் உணர்த்துதல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.