தோட்டக்கலைத்துறையால் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள்
|தோட்டக்கலைப்பயிர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் தோட்டக்கலைத்துறையால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன்விவரம் வருமாறு:-
1. துளி நீரில் அதிகப்பயிர் என்ற உட்பிரிவில் நுண்ணீர் பாசனத்தின் கீழ் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம்
2. தேசிய தோட்டக்கலை இயக்கம்
3. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
4. நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம்
5. தேசிய ஆயுஷ் இயக்கம்-மருத்துவப் பயிர்கள்
6. தேசிய மூங்கில் இயக்கம்
7. தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீன மயமாக்கல் திட்டம் (தோட்டக்கலை)
8. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்
9. தோட்டக்கலை பயிர்களில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம்
10. தோட்டக்கலை பயிர்களில் கூட்டுப்பண்ணையம்
தோட்டக்கலை மேம்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் திட்டத்தின் மூலம் 2022-23ஆம் நிதியாண்டில் ஆண்டில் பல்வேறு திட்ட இனங்களை செயல்படுத்துவதற்கு ரூ.170.79 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு செயல்திட்ட அறிக்கையினை தயாரித்து, அதற்கான ஒப்புதலை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதில், ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25 ஆயிரத்து 680 எக்டர் அளவுக்கு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு முதற்கட்ட நிதி விடுவிக்கப்பட்டது.
இந்த நிதியின் மூலம் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகிறது.