< Back
சிறப்புக் கட்டுரைகள்
மஹிந்திரா தார், பொலேரோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்
சிறப்புக் கட்டுரைகள்

மஹிந்திரா தார், பொலேரோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்

தினத்தந்தி
|
2 Feb 2023 3:17 PM IST

எஸ்.யு.வி. தயாரிப்பில் தனித்துவமாகத் திகழும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சாகசப் பயணம் மேற்கொள்வோருக்காக உருவாக்கியதுதான் தார் மாடலாகும். மஹிந்திரா நிறுவனத்தின் பொலேரோ மாடலில் லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தற்போது மேம்பட்ட மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.9.99,000. இதில் பின் சக்கர சுழற்சி மற்றும் அனைத்து சக்கர சுழற்சி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நான்கு சக்கர சுழற்சி கொண்ட மாடலில் எலெக்ட்ரானிக் பிரேக்கிங் வசதி உள்ளது.

இது 117 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை, 6 கியர்களைக் கொண்டது. இதில் மேனுவல் மற்றும் கன்வெர்டர் ஆட்டோ மேடிக் வசதியும் உள்ளது. சாகசப் பயணம் மேற்கொள்வோருக்கென அதிகபட்ச வசதிகளைக் கொண்டது. ஸ்போர்ட்டி முன் இருக்கைகள் மற்றும் சாய்வு வசதி கொண்ட பின் இருக்கைகள், மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். தொடுதிரை, டயர்ட்ரானிக்ஸ், இ.எஸ்.பி., ஏ.பி.எஸ். வசதிகள், ஏர் பேக்குகள் உள்ளன.

மஹிந்திரா பொலேரோ லிமிடெட் எடிஷன்:

மஹிந்திரா நிறுவனத்தின் பொலேரோ மாடலில் லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.11.49 லட்சம். இந்த மாடலில் மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட என் 10 மாடலில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு லிமிடெட் எடிஷனாக வந்துள்ளது. வெளிப்புற மற்றும் உள்புறங்களில் மாறுதல் கள் செய்யப்பட்டுள்ளன. என்ஜின் திறனில் மாறுதல்கள் செய்யப்படவில்லை.

இதில் மேல்பகுதியில் ரூப் ஸ்கை ரேக்ஸ் உள்ளன. அதிக பனிப்பொழிவு இருப்பின் கூடுதல் வெளிச்சம் தரக்கூடிய பாக் விளக்குகள், ஒருங்கிணைந்த எல்.இ.டி. முகப்பு விளக்கு, ஸ்டெப்னி மேல்பாகம் சில்வர் நிறம் போன்ற அம்சங்கள் மற்றும் உள்பகுதியில் இரண்டு வண்ணங்கள் கொண்டதாக உள்ளது. டிரைவர் இருக்கையில் முதுகு தண்டுவட பாதுகாப்புக்கென சிறப்பான வடிவமைப்பு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பார்க்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், புளூசென்ஸ் கார் செயலி, பன்முக செயல்பாடு களைக் கொண்ட ஸ்டியரிங் சக்கரம் ஆகியன இதன் சிறப்பம்ச மாகும். இதில் 1.5 லிட்டர் எம் ஹாக் என்ஜின் உள்ளது. இது 100 பி.ஹெச்.பி. திறனையும், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசை யையும் வெளிப்படுத்தும். இது 5 கியர்களைக் கொண்ட தாகும்.

மேலும் செய்திகள்