< Back
சிறப்புக் கட்டுரைகள்
மஹிந்திரா ஸ்கார்பியோ என்
சிறப்புக் கட்டுரைகள்

மஹிந்திரா ஸ்கார்பியோ என்

தினத்தந்தி
|
7 July 2022 5:13 PM IST

மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது ஸ்கார்பியோ மாடல் எஸ்.யு.வி.யாகும்.

இதில் தற்போது புதிதாக பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு ஸ்கார்பியோ என் என்ற மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.11.99 லட்சம். எஸ்.யு.வி. வாகனங்களில் மிகப் பெரும் மாற்றத்தை உருவாக்கியது ஸ்கார்பியோ.

முந்தைய மாடலை விட வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திலான செயல் திறனில் இது வந்துள்ளது. இதை ஓட்டுவது மிகச் சிறந்த அனுபவத்தை அளிப்பதோடு பயணம் செய்வதில் அதிகபட்ச சவுகரியமும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு அம்சங் களை இது கொண்டுள்ளது.

இதில் உள்ள அட்ரினாக்ஸ் செயலி அலெக்ஸா, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் வகையிலானது. மிகச் சிறப்பான இசையை வழங்க முப்பரிமாண சோனி சவுண்ட் சிஸ்டம் உள்ளது. நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது.

இதில் முதல் முறையாக மலைப்பகுதியில் செல்லும்போது அதற்கேற்ற நிர்வாக தொழில்முறை புகுத்தப்பட்டுள்ளது. இதனால் சாகசப் பயணம் இதில் மிகவும் எளிதாகும். பெட்ரோல் மாடல் 200 ஹெச்.பி. திறனையும், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். மிகக் குறைவான அளவே கரியமில வாயு வெளியிடும் தொழில்நுட்பம் கொண்டது. மொத்தம் 5 வேரியன்ட்களில் 7 கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது.

6 கியர்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வசதி கொண்டதாக வந்துள்ளது. நான்கு சக்கர சுழற்சி உள்ளது இதன் சிறப்பம்சமாகும். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத டிப் பெயிண்ட் எனப்படும் புதிய வண்ணப்பூச்சு தொழில்நுட்பமும் இதில் பின்பற்றப்பட்டுள்ளது. பிரீமியம் மாடலில் மேற்கூரை திறந்து மூடும் வசதி கொண்டதாக வந்துள்ளது.

மேலும் செய்திகள்