மகாராஜா எக்ஸ்பிரஸ் எனும் பிரமாண்டம்
|இந்தியன் ரெயில்வே சார்பில் மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பயணிகளுக்கு சொகுசு அறை, தனி நபர் பார், குளிர்சாதன வசதி, வை-பை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப் படுகின்றன.
இந்தியாவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியன் ரெயில்வே சார்பில் மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானைச் சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க அரண்மனைகள், கோட்டைகளைப் பார்வையிடும் வகையில் 4 வழித்தடங்களில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. 7 இரவுகள், 8 பகல் பொழுது இந்த ரெயிலில் பயணிக்கலாம்.
இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த கட்டணம் இந்த ரெயிலில் செல்ல வசூலிக்கப்படுகிறது. பொதுவாக நம்மில் பலரும் விமானம், பேருந்து, கார் உள்ளிட்டவற்றில் பயணிக்க ஆர்வம் காட்டினாலும், ரெயில் பயணத்தில் செலவு குறைவு என்பதாலேயே பலரும் அதை விரும்புகிறார்கள். அதேசமயம், மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கான கட்டணத்தைக் கேள்விப்படும் எந்த நபரும் ரெயில் பயணத்தில் செலவு குறைவு என்று கூறமாட்டார். காரணம், இந்த ரெயிலில் பயணக் கட்டணமாக ரூ.19 லட்சம் வசூலிக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிநபர் சேவை வழங்கப்படுகிறது. பயணிகளுக்கு சொகுசு அறை, தனி நபர் பார், குளிர்சாதன வசதி, வை-பை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ரெயிலில் குஷாக்ரா என்ற இளைஞர் ரூ.19 லட்சம் கொடுத்து பயணித்து அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இந்திய ரெயில்வேயில் இதுபோன்ற ஒரு ஆடம்பர பயணத்தை அனுபவித்ததுண்டா என்று கேள்வி எழுப்பி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். குஷாக்ராவின் வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். `இந்த ரெயிலில் ஒரு நாள் பயணிப்பதற்குப் பதிலாக சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி விடுேவன்' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் 'ரெயிலுக்கு டிக்கெட் எடுத்த பணத்தில் இந்த உலகத்தையே சுற்றிப் பார்த்திருக்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.